பாராளுமன்றத்தில் சலசலப்பு - 20 நிமிடங்கள் சபை நடவடிக்கை ஒத்தி வைப்பு
பாராளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக சபை 20 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி விலக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம நீதியரசர் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதனால் சபையில் குழப்ப நிலைமை ஏற்பட்டது. இதனை அடுத்து அவையின் நடவடிக்கைகளை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் சமால் ராஜபக்ச அறிவித்தார்.