இந்திய அரசின் நிதியுதவியில் 2014 இல் 27ஆயிரம் வீடுகள் நிர்மாணம்
இந்திய அரசின் நிதியுதவியில் கடந்த 2014 ஆம் ஆண்டில் 27 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது என இந்தியத் துணைத்தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டில் 14 ஆயிரத்து 555 வீடுகளும், கிழக்கு மாகாணத்தில் ஆயிரத்து 447 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக வடக்கில் 162 நிர்மாணிக்கப்பட்டும் உள்ளன. 2010 யூன் மாதம் இந்தியாவுக்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்து தருமாறு கேட்டிருந்தார்.
அதற்கமைய வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க 30 பில்லியன் இலங்கை ரூபாவை ஒதுக்கீடு செய்தது. இதேவேளை இந்த ஆண்டில் 19 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவும், 7 ஆயிரம் வீடுகள் புனரமைக்கப்படவும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. -