2005ம் ஆண்டு மகிந்த வெற்றிக்கு புலிகள் காரணமல்ல-சிவாஜி
2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த வெற்றி பெறுவதற்கு விடுதலைபுலிகள் காரணம் எனக் குறிப்பிடுவது பச்சைப் பொய் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரித்துள்ளார்.
இன்று மதியம் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-
பொது எதிரணியினர் மற்றைய கட்டசியனரும் தேர்தல் பிரச்சாரத்தின் போது விடுதலைப் புலிகளின் ஆதரவில்தான் மகிந்த 2005ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார் என்று விமர்சித்து வருகின்றது.இந்த கருத்தை நான் முற்றாக நிராகரிக்கின்றேன்.இவர்கள் கூறுவது முற்று முழுதாக பொய்யான பரப்புரையாகும்.
விடுதலைப்புலிகளிடம் சரியான ஒரு நடைமுறை அரசாங்கம் இருந்தது அவர் இந்த தவறை விடவில்லை. பணம் பெற்று மகிந்தவுக்கு ஆதரித்ததை போன்ற கருத்து மறுக்கப்பட வேண்டியவை .அதே சந்தர்ப்பத்தில் அன்றைய காலக்கட்டத்தில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவே விடுதலைப்புலிகளும் கூட்டமைப்பும் முடிவு எடுத்திருந்தது ஆனால் ரணில் தரப்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்காத படியினால் தேர்தலில் இருந்து ஒதுங்கி விட்டோம் இதனால் மகிந்த அன்றைய தேர்தலில் வெற்றி பெறுவதற்கு புலிகள்தான் காரணம் என்பது பச்சசைப் பொய் என அவர் தெரிவித்துள்ளாா்.