ராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல் தொடர்பில் 2000 முறைப்பாடுகள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல் தொடர்பில் 2000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய நூலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அதன் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்தார். இதன்படி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக 150 முறைப்பாடுகளும் சஜித்வாஸ் குணவர்தன எம்.பி.க்கு எதிராக 200 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் 30 முறைப்பாடுகள் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.