அஸ்வர்க்கு பதிவி உயர்வு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாராளுமன்ற விவகார ஆலோசகராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகித்த அஸ்வர் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
கட்சியை பலப்படுத்தும் நோக்கில் தாம் பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாராளுமன்ற விவகாரம் மற்றும் ஊடக ஆலோசகராக அஸ்வர் நியமிக் கப்பட்டுள்ளார். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர்அலிக்கு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற ஆசனத்தை வழங்கும் நோக்கில் அஸ்வர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
எனினும், அமீர்அலி இதுவரையில் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஊடகவியலாளரான அஸ்வர் முஸ்லிம் விவகார அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.