மகிந்த என்னிடம் ஆதரவு கேட்டது கட்டுக்கதை- சங்கா
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்காராவிடம், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ராஜபக்ச உதவி கேட்டதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஜனாதிபதித் தேர்தல் பரப்புரைக்கு என்னிடம் ராஜபக்ச ஆதரவு கேட்டதாகவும், இதற்காக அவர் பணம் கொடுக்க முன்வந்ததாகவும் பரவிக்கொண்டிருக்கும் செய்தி எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
எந்த ஒரு நேரத்திலும் அவரது பரப்புரையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று ராஜபக்ச என்னிடம் கேட்டதில்லை என்பதை நான் திட்டவட்டமாக உறுதிப்படுத்த விரும்புகிறேன். இது தீய நோக்கத்துடன் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் புனையப்பட்ட கட்டுக்கதை. இதை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.