தமிழருக்கு அவுஸ்திரேலியாவில் நினைவுச் சின்னம்
இலங்கையில் இனப்போரில் உயிரிழந்த தமிழர்களை நினைவுகூரும் வகையில் நிரந்தர நினைவுச் சின்னம் ஒன்று, அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில், உலகின் இரண்டாவது பாரிய யுத்த நினைவு மயானத்தை உள்ளடக்கிய ரூக்வூட் மயானத்தில், நிறுவப்பட்டுள்ளது.
கடந்த 30 வருடங்களாக நடந்த யுத்தத்தின் போதும் உயிர்நீத்த உறவுகளுக்காகவும் இறுதி யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் மற்றும் இந்திய மற்றும் பல இதர நாடுகள் சேர்ந்து தனது மக்களின் நலனுக்காகவும் தமிழர்களின் உரிமைக்காகவும் போராடி மடிந்த மக்களை நினைவு கூரும் வண்ணம் இந்த நிரந்தர நினைவுச் சின்னம் நிறுவப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எந்த நேரமும் எவர் வேண்டும் என்றாலும் போய் தங்களது உறவுகளை நினைவு கூரும் வண்ணம் இந்த நினைவுச் சின்னம் நிறுவப்பட்டுள்ளது.இந்த நினைவுச் சின்னம் எதிர்வரும் ஜனவரி 1ம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.