கடுமையான நடவடிக்கை எடுப்பேன்-சிவாஜி
தமது யோசனை தொடர்பில் உரிய பதில் கிடைக்காது போனால் தாம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாணசபையின் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் இனப்படுகொலைகள் இடம்பெற்றன என்ற யோசனையை சமர்ப்பித்து அதனை வடமாகாணசபை நிறைவேற்ற வேண்டும் என்று சிவாஜிலிங்கம் கோரி வருகிறார்.எனினும் இதனை விவாதத்துக்கு எடுக்காமல் வடமாகாணசபை தாமதம் செய்து வருகிறது.இந்தநிலையில் கடந்த வாரம் விவாதம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சிவாஜிங்கம் கோரினார். எனினும் அவைதலைவர் அதனை ஏற்காது அவையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
இதனையடுத்து சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்கி வீசியிருந்தார்.
இந்த நிலையில் தமது யோசனை தொடர்பில் இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாது.ஒருவாரத்தில் தமக்கு உரிய பதில் வழங்க வேண்டும். இல்லையேல் தாம் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கையை அறிவிக்கப்போவதாக சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-