Breaking News

தவராசாவுக்கு பதிலடி கொடுத்தார் சி.வி.கே

வடமாகாண சபைக்கு இலங்கை மத்திய அரசாங்கம் மற்றைய மாகாணங்களை விடவும் அதிகளவு நிதியினை ஒதுக்கியதாக மாகாணசபையின் வரவுசெலவு திட்டத்தில் கருத்துக் கூறிய மாகாணசபை எதிர்க்கட்சி தலைவருக்கு அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பதிலடி கொடுத்துள்ளார்.


மாகாணசபையின் 2015ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் 2ம் வாசிப்பும், நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலான விவாதமும் இன்றைய தினம் நடைபெற்றிருந்தது.

இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வடமாகாண சபைக்கு இலங்கையின் மற்றய மாகாணங்களை விடவும் அதிகளவு நிதியை, மத்திய அரசாங்கம் வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவரின் கருத்துக்குப் பதிலளித்த அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வடமாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் கூறிய கருத்துக்களில் தவறு உள்ளதாக கூட்டிக்காட்டியதுடன், இலங்கையில் உள்ள மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் வடமாகாணம் 6வது இடத்தில் இருப்பதாக தரவுகளுடன் சுட்டிக்காட்டினார்.

மேலும் இவ்வரும் அரசாங்கம் மூலதனச் செலவில் 394மில் லியன் ரூபா நிதியினையும், மொத்த வரவு செலவு திட்டத்தில் 900ம் மில்லியன் ரூபா நிதியினையும் குறைத்திருக்கின்றது. என சுட்டிக்காட்டியதுடன், இலங்கையில் அதிகளவு நிதி மேல் மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதனையடுத்து தனது கருத்து பொய்த்துப்போன நிலையில் அவைத்தலைவர் சபையில் கருத்துக்கூற முடியாது என சபையில் கூச்சலிட்டார்.