Breaking News

ஒருங்கிணைப்பு கூட்டம் ஒத்திவைப்பு

இன்று நடைபெறவிருந்த யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இணைத் தலைவர்களுள் ஒருவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கலந்துரையாடலில் பங்கேற்கமுடியாது என்று தெரிவித்தமையாலேயே அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  
 

 யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கடந்த மாதம் 26 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் கூட்டம் இரத்துச்செய்யப்பட்டது.         அதன்  பின் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்றுத் திடீரென இன்று இடம்பெறவிருந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அறிவித்துள்ளார்.