Breaking News

தேர்தல் சட்டங்களை அரச ஊடகங்கள் மீறுகின்றன-மைத்திாிபால

ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தமது சொத்து விபரங்களை நேற்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு வெளிப்படுத்தினாா். 



அதன் பின்னா் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே தோ்தல்கள் சட்டத்தை அரசாங்க ஊடகங்கள் மீறுவதாக குற்றஞ்சுமத்தியுள்ளாா்.

அங்கு அவா் மேலும் தொிவிக்கையில் தமது சொத்துக்கள் தொடபான விபரங்கள் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று குறிப்பிட்டார்.அத்துடன் தமது தேர்தல் பிரசாரக் காரியாலயங்களில் அதன் பிரதிகள் வைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இதேவேளை தாம் சுகாதார அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய தேவையற்ற எரிபொருள் படிவங்களையும் அவர் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளித்தார்.இதற்கிடையில் தேர்தல்கள் சட்டத்தை அரசாங்க ஊடகங்கள் மீறுகின்றன என்ற குற்றச்சாட்டை அவர் சுமத்தினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வீட்டில் இருந்து தேர்தல்கள் ஆணையகத்துக்கு வரும் வரையிலான காட்சியை அரச தொலைக்காட்சியான  ரூபவாஹினி ஒளிபரப்பியது.அத்துடன் அவருக்கு அதிக நேரங்கள் அந்த தொலைக்காட்சி ஒதுக்கியுள்ளதாகவும் மைத்திரிபால குற்றம் சுமத்தினார்.