கட்சி தாவியவா்களுக்கு மீண்டும் இடமில்லை - ஜனாதிபதி
கட்சி தாவியவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சித் தாவிய எவருக்கும் இனி அரசாங்கத்தில் இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆளும் கட்சியில் இணைந்து கொள்வோருக்கு நல்ல எதிர்காலம் உண்டு எனவும், எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வோர் பற்றி சொல்வதற்கில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் வரையிலான பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஆளும் கட்சியை விட்டு விலகி வருகின்றனர்.இவ்வாறான ஓர் பின்னணியில் மஹிந்த ராஜபக்ச இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.