Breaking News

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பதவி விலகல்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செலி சீசன் நேற்று தனது தூதுவர் பொறுப்பிலிருந்து விலகிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இவர் செல்லு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உட்பட அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலரைச் சந்தித்துத் கலந்துரையாடியுள்ளார்.

இவருக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் உயர் பதவியொன்று கிடைத்துள்ளமையினால் இலங்கையின் துாதுவர் பதவியிலிருந்து விலகிச் செல்வதாக அமெரிக்க துாதரகம் அறிவித்துள்ளது.

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்காவின் துாதுவர் ஒருவர் சேவைக்காலம் முடிவதற்கு முன்னர், இடையில் விலகிச் செல்வது இதுவே முதல் தடவை குறிப்பிடத்தக்கது.