பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் மைத்திரிக்கு ஆதரவு
இந்த நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகின்றது. இந்த ஆட்சியை ஒழிக்க மக்களாகிய நாம் சிந்தித்து செயற்பட வேண்டும் என பல்கலைக் கழக ஆசிரியர் குழு தெரிவித்துள்ளது.
இந்த நாடு தற்போது ஒரு முக்கியமான கால கட்டத்தில் உள்ளது. ஜனாதிபதித் தேர்தலை எதிர்நோக்கவுள்ளோம் இந்தக் காலத்தில் நாம் ஒரு தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும்.
பொது அபேட்சகர் என்ற வகையில் மைத்திரிபால சிறிசேன இந்த நாட்டில் ஜனநாயகத்துக்கான பாதையை முன்னேற்றுவதும் முற்போக்கான சிந்தனையை வளர்ப்பதும் அவருடைய முக்கிய தொனிப் பொருளாகாக் கணப்படுகின்றது. அந்த வகையில் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் ஆகிய நாங்கள் அவருக்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானித்துள்ளோம்.