பல்டிக்கு தயாராகும் ஐந்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள்
இந்த வாரத்தில் மேலும் ஐந்து ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவுடன் எதிரணிக்குத் தாவத் திட்டமிட்டிருந்த அமைச்சர்கள் உள்ளிட்ட 23 பேரில் அடங்கியிருந்த குறைந்தது ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்தவாரம் எதிரணியுடன் இணையவுள்ளனர்.ஆளும்கட்சியின் 23 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மைத்திரிபால சிறிசேனவை, பொது வேட்பாளராக நிறுத்துவது குறித்து எதிரணியுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.
எனினும், பல்வேறு காரணங்களால், அவர்கள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் தொடர்ந்திருக்க முடிவு செய்திருந்தனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.எனினும், கட்சி தாவத் திட்டமிட்டுள்ள ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விபரம் ஏதும் வெளியிடப்படவில்லை.