பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார் மகிந்த- ரிஷாட்
மகிந்த ராஜபக்ச பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருக்கின்றார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
யுத்த வெற்றிக்கு நன்றிக் கடனாகவே 2010 இல் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் எமது இனத்துக்கு எதிராக அநியாயங்களையே இந்த அரசு செய்தது. அதற்கு நல்ல தண்டனையக் கொடுத்துள்ளோம்.
எமது இனத்தின் மீது கை வைப்பவர் யாராக இருந்தாலும் அவருக்கும் இவ்வாறான தண்டனைகளை வழங்கத் தவற மாட்டோம். நாம் இவ்வாறானதொரு முடிவை எடுப்போம் என ஆட்சியாளர்களே, மக்களோ நினைத்துக்கூடப் பார்க்க மாட்டீர்கள். ஏனெனில் நாம் கடந்த 9 வருடங்களாக அரசுக்குப் பலமாக இருந்து ஜனாதிபதியை உருவாக்கிய பங்காளிகளில் ஒருவர். அபிவிருத்திக்குப் பலமாக இருந்த எங்களின் முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
ஆனால் முஸ்லிம்களின் பெரும்பான்மை பலத்தைப் பெற்ற கட்சியினரே இவ்வாறான முடிவை எடுப்பர் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் இன்னமும் முடிவெடுக்கவில்லை. மூன்றாவது தடவையல்ல தனது ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்க மகிந்த ராஜபக்ச ஆசைப்படுகின்றார். இதற்காக அவர் எதை வேண்டுமானாலும் செய்யவும் தயாராகவே இருக்கின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.