கொக்குத்தொடுவாயில் காணிகள் அபகரிப்பு-ரவிகரன் குற்றம்சாட்டு
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் இலங்கையின் மூத்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் உறவினர்கள் தமிழர்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ளதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
வடக்கு மாகாணசபையின் நேற்றைய அமர்வில் காணி தொடர்பான பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முல்லைத்தீவில் ஆண்டான்குளம். செம்மலை, நாயாறு, மணவாளன்பட்டமுறிப்பு, கரிப்பட்டமுறிப்பு பகுதிகளில் தமிழர்களின் காணிகள் போரினால், கைவிடப்பட்ட நிலையில் இப்போது பெரிய காடுகளாகி விட்டன.அந்தக் காணிகளை வன இலாகாவினர் எல்லையிட்டு வருவதால் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன.
அதேவேளை, கொக்குத்தொடுவாய் பகுதியில் இலங்கையின் மூத்த அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தனது சகோதரி மற்றும் உறவினர்களுக்கு காணிகளைப் பிடித்துக் கொடுத்திருக்கிறார்.அவர்கள் அந்தக் காணிகளுக்கு அப்பாலுள்ள காணிகளின் பாதைகளையும் மறித்து அடைத்துள்ளனர்.கொள்கையடிப்பவர்களே இன்று நாட்டை ஆளுகின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.