அஸ்வரின் இடத்தை பிடித்தார் அமீல் அலி
பாராளுமன்றில் வெற்றிடமாகியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலியை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏ.எச்.எம்.அஸ்வர் இராஜினாமா செய்துள்ள நிலையில் அந்த வெற்றிடத்தை தமது உறுப்பினரைக் கொண்டு நிரப்ப அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் வாரத்தில் அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
அமீர் அலிக்கு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அந்த கோரிக்கை குறித்து ஜனாதிபதியுடன் ரிசாத் பதியூதின் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளிவராத நிலையில் அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார்.
இதேவேளை, அமீர் அலியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பதவிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அலிசாகிர் மவுலானா நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.