பாப்பரசாின் விஜயத்தை ஒத்திவைக்க கோாிக்கை
பாப்பரசர் பிரான்சிசின் இலங்கைக்கான விஜயத்தை ஒத்திவைக்குமாறு இலங்கையின் முக்கிய கத்தோலிக்க பாதிாிமாா்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் மூன்றாவது முறையாக தேர்தலில் களமிறங்கும் மஹிந்த ராஜபக்ஷ பாப்பரசரின் வருகையை சாதகமாக பயன்படுத்தலாம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் எதிர்வரும் ஜனவரி மாதம் 13ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். முன்னதாக ஜனவரி 8ம் திகதி இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தனது இந்த விஜயத்தின் போது, இலங்கையில் 17 ஆம் நூற்றாண்டு கிறிஸ்தவ மத போதகராக செயல்பட்ட ஜோசப் வாஸ் அவர்களை புனிதராக அறிவிக்கவும் பாப்பரசர் எதிர்பார்த்துள்ளார்.
பாப்பரசரின் வருகை இடம்பெறவுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையிலுள்ள கத்தோலிக்கர்களை வெறுப்படையச் செய்துள்ளதாக, கத்தோலிக்க பத்திரிகை ஒன்றின் முன்னாள் ஆசிரியர் ஹெக்டர் வெல்கம்பொல கருத்து வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.