வாக்கு கொள்ளைக்கு வாய்ப்பில்லை - பொது வேட்பாளர்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு முறையிலும் வாக்கு கொள்ளைக்கு இடமளிக்கப் போவதில்லை என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமகாராம – ரன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.இந்த நாட்டில் பொது மக்களின் பலத்துடன் அன்று யுத்தம் நிறைவு செய்யப்பட்டு சமாதானம் ஏற்படுத்தப்பட்டது.
தேசியக் கொடியுடன் வீதிக்கு இறங்கிய பொது மக்கள் ஜனாதிபதி தமது மகா ராஜன் என்று வர்ணித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.பாடல்களை திரிபு படுத்தி பாடியமை யாரும் மறக்கமாட்டார்கள்.நாட்டு மக்கள் அவரை மன்னர் என்று வர்ணித்த போது, ஜனாதிபதி தன்னை மன்னராகவே, நினைத்துக்கொண்டு அதற்கான சொரூபத்தை எடுத்துக்கொண்டார்.
தன்னை ஆட்சியில் அமர்த்திய பொதுமக்களை மறந்தார். அதனாலேயே முறைகேடான ஆட்சி இந்த நாட்டில் நிலைபெற்றது என மைத்திரிபால சிறிசேன தனது உரையில் தெரிவித்தார்.
இதேவேளை. அமெரிக்காவின் பிரசார நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இலங்கையின் தேசிய கீதத்தை தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளு;ககாக ஜனாதிபதி களவாடியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சுமத்தியுள்ளார்
மாத்தளையில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசார மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். இன்றைய பத்திரிகைளை எடுத்துக்கொண்டால் ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரங்கள் இருக்கின்றன.
அவரின் புகைப்படங்களை பிரசுரித்து 'நீங்களே எமது சக்தி' என வாசகம் எழுத்தப்பட்டுள்ளது. எங்களது சக்தி யார், ஸ்ரீ லங்கா மாதாவா அல்லது மஹிந்த ராஜபக்ஷவா என எதிர்கட்சித் தலைவர் கேள்வியெழுப்பினார்.மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்திற்கு கீழ் பகுதியில் 'எமது மனங்களில் நீங்களே பக்தி' மற்றும் 'நீங்களே எங்கள் வாழ்வின் ஒளி' என குறிப்பிடப்பட்டுள்ளன.
'நீங்களே எங்கள் இருள்' என குறிப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை. இப்படியாக தேசிய கீதத்தில் பல வசனங்கள் தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.