மட்டுக்கு மகிந்த வருகை தமிழ், முஸ்லிம்,பொலிசார் புறக்கணிப்பு
மட்டக்களப்புக்கு தேர்தல் பிரசாரத்திற்காக நாளை மகிந்த ராஜபக்ச வருகை தரவுள்ள இந்து கல்லூரி மைதானத்திற்குள் எந்தவிதமான தமிழ் முஸ்லிம் பொலிசாரையும் கடமைக்குள் உள்வாங்காமை ஒட்டு மொத்த தமிழ் முஸ்லிம் மக்களையும் புறக்கணித்தமைக்கு ஒப்பானதாகும் என பா.அரியநேத்திரன் பா.உ. தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாதிப்புக்குள்ளான பொலிசார் தம்மிடம் முறையிட்ட கருத்துக்களை முன்வைக்கையில்,
நாளை மட்டக்களப்பிற்குள் வருகை தரவுள்ள ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு 200 பொலிசார் மைதானத்தற்குள் கடமைகளை பொறுப்பேற்கின்றனர். இவர்களில் ஒரு தமிழ், முஸ்லிம் பொலிசார்கூட அனுமதிக்கப்டவில்லை. வெறுமனே சிங்கள பொலிசாரை மாத்திரம் உள்வாங்கி இருப்பது மிகவும் மனவேதனை தரும் விடயமாகும்.
ஒரே கொடி, ஒரே தேசம் என்று கூறுபவர்கள் இவ்வாறு நடந்து கொள்வார்களேயானால் யார் யாரை நமபுவது என்று தெரியாமல் இருக்கின்றது. எங்களது கடமைகள் அனைத்தும் மைதானத்திற்கு வெளியிலேயே ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
தமிழ், முஸ்லிம் மக்களது வாக்குத் தேவை என வருபவர்கள் தமிழ், முஸ்லிம் பொலிசாரை புறக்கணிப்பதன் நோக்கம் என்ன என்று தெரியாத நிலையிலேயே இன்று நாங்கள் இருக்கின்றோம் எனவும் பாராளுமன்ற உறுப்பினரிடம் கவலை தெரிவித்ததாகவும் கூறினார்.