பாதுகாப்பை இழந்தார் திஸ்ஸநாயக்க
முன்னாள் கல்வி சேவைகள் அமைச்சர் துமிந்த
திஸாநாயக்கவின்பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துமிந்த திஸாநாயக்கவிற்கு சுமார் 24 காவல்துறை உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு வழங்கி வந்தனர்.
இந்த காவல்துறை உத்தியோகத்தர்களில் 20 பேர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் நடைபெறும் காலத்தில் இவ்வாறு இடமாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் அனுராதபுரம் காவல்துறை தலைமைக் காரியாலயத்தில் பணியாற்றிய வந்த 20 காவல்துறை உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
துமிந்த திஸாநாயக்க ஆளும் கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொண்டு, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து துமிந்தவின் பாதுகாப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் துமிந்த திஸாநாயக்கவின் பாதுகாப்பிற்காக ஒரு காவல்துறை உத்தியோகத்தரேனும் கடமையில் அமர்த்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.