Breaking News

புலிகளை ஒழிப்பதற்கு ஆயுதங்களை ஐ.தே.க. கொள்வனவு செய்தது-ருவான் விஜேவர்தன.

தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாது ஒழிப்பதற்கான ஆயுதங்களை ஐக்கிய தேசியக் கட்சியே கொள்வனவு செய்தது என கட்சியின் இளைஞர் முன்னணித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.


முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்கான ஆயுதங்கள் கொள்வனவு செய்தது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் உண்மையில், கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு ஆயுதங்களை கொள்வனவு செய்தது என்பதே யதார்த்தம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் புலிகளுடன் தொடர்புகளைப் பேணவில்லை எனவும் எதிர்காலத்திலும் தொடர்புகள் பேணப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும் கொள்கைகள் மாற்றமடையவாத வகையிலான கலாச்சாரம் ஒன்றை புதிய அரசாங்கம் உருவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.