சம்பந்தன் இந்தியா விஜயம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தேர்தல் குறித்து பேச இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், பிரதான வேட்பாளர்கள் இருவரும் தமிழர் பிரச்சினை பற்றி எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது குறித்து சம்பந்தன் தெளிவுபடுத்த உள்ளார்.சம்பந்தன் நாடு திரும்பியதன் பின்னர் வடக்கு சிவில் சமூக கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கோரிக்கைகள் அடங்கிய ஆவணமொன்றை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்தியாவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப்பட மாட்டாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.