அமெரிக்க ஊடகவியலாளர் கொலை
அல்கைதா அமைப்பினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
யேமன் இராணுவம் மற்றும் அமெரிக்க படையினர் இணைந்து மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் லூக் சோமர்ஸ் கொல்லப்பட்டுள்ளதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.அல்தைா அமைப்பின் ஏமன் நாட்டுப் பிரிவான அரேபிய தீபகற்பத்துக்கான அல்கைதா அமைப்பு கடந்த 2013ஆம் ஆண்டு அமெரிக்க புகைப்படப்பிடிப்பாளரான லூக் சோமர்ஸ் கடத்தப்பட்டார்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் சோமர்சை கொலை செய்வதாக அல்கைதா நேற்று முன்தினம் வெளியிட்ட காணொளி மூலம் அறிவுறுத்தியிருந்தது.இந்நிலையில் அல்கைதா அமைப்பினர் அமெரிக்காவிற்கு விடுத்த மூன்று நாட்கள் காலக்கெடு முடிவடைந்ததால் சோமர்ஸ் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.