பொது எதிரணியில் இணையப்போகும் அமைச்சர்கள்
ஆளும் கட்சியின் சில முக்கிய அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு மிக நெருக்கமானவர்கள் சிலரும் இவ்வாறு இணைந்து கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்க்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொது மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா, தபால் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க, பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன, எஸ்.பி. நாவீன்ன உள்ளிட்ட சிலர் இவ்வாறு இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்றும் நாளையும் இவர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க்பபடுகிறது.இதேவேளை, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் எதிர்வரும் நாட்களில் வாசுதேவ நாணயக்கார அரசாங்கத்தில் இருப்பது குறித்த இறுதித் தீர்மானத்தை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டாலும் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு ஆதரவு அளிக்கப் போவதாக வாசுதேவ நாணயக்கார முன்னர் அறிவித்திருந்தார்.
எனினும், எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னதாக ஆளும் கட்சியின் சில முக்கிய அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளக்கூடிய அதிக சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது