Breaking News

படையினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை-வணிகசூரிய

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை இராணுவத்தினர் நிராகரித்துள்ளனர்.இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.


இந்தக் குற்றச்சாட்டை அடிப்படையற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தெஹிவளை. ரத்மலானை பகுதிகளில் மஹிந்த ராஜபக்சவுக்கு நேற்று படையினர் சுவரொட்டி பிரசாரங்களில் ஈடுபட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இன்று குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படுமானால் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.