தேர்தல் விதிமுறைகளை மீறினார் வடக்கு ஆளுநர்
ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் வேளையில் வட மாகாண ஆளுநரால் ஒரு தொகுதி மோட்டார் சைக்கிள்கள் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்னர் அரச துறைகளில் வேலை வாய்ப்புக்களோ, அரச உதவிகளோ, இடமாற்றங்களோ வழங்கப்படுவது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல்.
இந்தநிலையில் ஆளுநர் செயலகத்தில் பல்வேறு திணைக்களங்களை சேர்ந்த 92 அரச உத்தியோகத்தர்களுக்கு இன்றைய தினம் மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.