இராதாகிருஷ்ணன் மற்றும் திகாம்பரம் மைத்திரிபாலவிற்கு ஆதரவு
பிரதி அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்த பாராளுமன்ற உறுப்பினர்களான வீ.இராதாகிருஷ்ணன் மற்றும் பி.திகாம்பரம் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவர்கள் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளனர்.