Breaking News

மகிந்தவுக்கு மைத்திரி சவால்

நேரடி விவாதம் ஒன்றுக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஸவிற்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார்.


எதிர்வரும் மாதத்தில் விவாதத்தை நடாத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.பலபிட்டியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் மைத்திரிபால இந்த பகிரங்க சவாலை விடுத்துள்ளார்.நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் தொடர்பில் விவாதம் நடத்தத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இணங்கினால், எந்தவிதமான எழுத்த மூல ஆவணமும் இன்றி வாய்மொழி விவாதம் நடாத்தத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.பொதுமக்கள் எதிர்நோக்கி வரும் பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாறாக 18ம் திருத்தச் சட்டத்தை வலுப்படுத்திக்கொள்ள அரசாங்கம் இந்த சட்டத்தை பயன்படுத்திக் கொண்டது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினால் நூறு நாட்களுக்குள் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.