Breaking News

இந்தியா செய்தால் நாங்களும் செய்வோம்-இலங்கை

இந்தியச் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை இந்திய அரசு விடுதலை செய்யுமானால், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளிவிவகார அமைச்சு ஊடாக கொழும்பிலுள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக இலங்கையின் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை பதில் அமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் 38பேர் இலங்கைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இதேபோல், இலங்கை மீனவர்களில் 10 பேர் ஆந்திராவிலும், 30 பேர் தமிழ் நாட்டிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.