போர்க்குற்ற விசாரணை உள்நாட்டு ரீதியாக நடத்துவது பொருத்தமானது -விக்ரமபாகு
போர்க்குற்றச் செயல் தொடர்பில் உள்நாட்டு ரீதியான விசாரணை நடத்துவது பொருத்தமானது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் டொக்டர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் அரசாங்கப் பிரதிநிதிகளை ஹேக் நீதிமன்றிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்துகின்றது. பின்னர் இலங்கையில் உள்நாட்டு ரீதியான விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறுகின்றது.உள்நாட்டு ரீதியில் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவது பொருத்தமானதல்லவா?காலணித்துவ ஆட்சியாளர் உலகிற்கு சென்று உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய அவசியமில்லை.
போர்ச் சூழலில் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருந்தால் உள்நாட்டு ரீதியில் ஆணைக்குழு அமைத்து விசாரணை செய்வதில் தவறில்லை. சர்வதேச ரீதியில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை. போர்க்குற்றச் செயல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு உள்நாட்டு ரீதியான விசாரணைகளே மிகச் சிறந்த பதிலாக அமையும் என்பதே எனது நிலைப்பாடு என விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
போர்க் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்நாட்டு ரீதியான விசாரணை நடத்தப்படும் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டமை விக்ரமபாகு கருணாரட்னவிடம் கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.