செங்கோலைத் தூக்கி எறிந்தாா் சிவாஜிலிங்கம்
தனது பிரேரணை தொடர்பில் திருப்தியின்மையால் செங்கோலைத் தூக்கியெறிந்தார் வட மாகாண சபையின் உறுப்பினர் சிவாஜிலிங்கம்.
வடக்கு
மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் பிரேரணை தொடர்பில் கால நீடிப்பு
செய்வதாக அவைத்தலைவர் தெரிவித்தபோது தனது பிரேரணைக்கு இன்றே வாக்கெடுப்பு
நடத்தப் போவதாக சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
எனினும் அதனை அவைத்தலைவர் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து கோபமடைந்த உறுப்பினர் செங்கொலை தூக்கியெறிந்தார்.
சிவாஜிலிங்கத்தின் பிரேரணை 6 மாதங்களின் பின்னர் இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனினும்
உறுப்பினர்கள் சிலர் அந்தப் பிரேரணையை ஏற்க வேண்டும் எனவும் முதலமைச்சர்
உள்ளிட்டவர்கள் ஆதாரபூர்வமாக அதனைத் தெரிவிக்க வேண்டும் எனவும்
தெரிவித்தனர்.
அத்துடன்
ஜனாதிபதி தேர்தலையடுத்து குறித்த பிரேரணை பற்றி பேசலாம் என முதலமைச்சர்
தெரிவித்தார். எனினும் அதனை மறுத்த சிவாஜிலிங்கம் இருவாரங்களுக்குள் தனது
பிரேரணை முடிவுக்கு வர வேண்டும் என்று வாதிட்டார்.
அதனை
அவைத்தலைவர் மறுத்தமையால் தனது உரிமை மீறப்பட்டது எனவும் சபையினைக் கலைய
விடமாட்டேன் என்று தெரிவித்து செங்கோலை தூக்கியெறிந்தார்.