என்னை நம்புங்கள் முள்ளியவளையில் மகிந்த
இறுதிப் போரில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்ட முல்லைத்தீவு முள்ளியவளையில் இன்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.நாட்டில் 30 ஆண்டு காலமாக இடம்பெற்று வந்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆளும் அரசு தொடர்பாகப் பொய் பரப்புரைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன என அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம். வடக்கு மாகாண சபைக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அது முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளாா்.