Breaking News

நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – மைத்திரி

நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


இந்தநிலையில் தாம் நல்லாட்சி ஒன்றை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படவிருப்பதாக, அவர் கூறியுள்ளார்.மொரவக்க - நாயாமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்று இதனைத் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை போல தேர்தல் சட்டங்களை மீறிய அரச தலைவர் யாரும் இல்லை.

எதிர்கட்சிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது,மேடைகளுக்கு தீவைக்கப்படுகிறது,சுவரொட்டிகளை ஒட்டுகின்றவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுகிறது.இதுதான் தற்போதைய ஜனநாயகம் என்று மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.