மகிந்தவை பதவியில் இருந்து ரத்து செய்ய இடமுண்டு-சரத் என் சில்வா
ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்துக்காக போலியான ஆவணத்தை பயன்படுத்தியமையானது, ஜனாதிபதி மீண்டும் தெரிவு செய்யப்படுவாரானால் அவரை பதவியில் இருந்து அகற்றும் குற்றமாக இருக்கும் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளாா்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளாதெர்தலில்ர்.ரணில் விக்கிரமசிங்கவும் மைத்திரிபால சிறிசேனவும் செய்து கொண்டதாக கூறி திஸ்ஸ அத்தநாயக்க, வெளியிட்ட இரகசிய ஆவணமானது போலி என்று கண்டறியப்பட்டுள்ளது.
இது, இலங்கையின் 452 ஆவது குற்றவியல் சட்டத்தின் கீழ் ராஜபக்சவின் தேர்தல் பிரசாரம் குற்றமாகும்.இந்தக்குற்றச்சாட்டின் கீழ் குற்றம் மேற்கொள்ளப்பட்டு 20 வருடங்கள் வரை குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்ய முடியும் என்று சரத் என் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின்படி, செய்தித் தாள்களை போலியாக வெளியிடல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளல் 83வது குற்றவியல் சட்டத்தின்படி குற்றமாகும்.
இந்தக்குற்றச்சாட்டுக்கள் மூலம், மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், அவரை உயர்நீதிமன்றத்தின் ஊடாக அந்த பதவியை ரத்து செய்ய முடியும் என்றும் சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார்.