கட்சி தாவியவர்களுக்கு எதிராக நடவடிக்கையாம் -திஸ்ஸவிதாரண
கட்சியின் ஒழுக்கத்தை மீறி பொது எதிரணியால் நிறுத்தப்பட்டுள்ள பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்த லங்கா சமசமஜக் கட்சியை சேர்ந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசின் சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஊடகவிளலாயர்கள் லங்கா சமசமஜக் கட்சியை சேர்ந்த சிலர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது குறித்து கேள்வி எழுப்பியபோதோ அமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார்.
தமது கட்சியின் கூட்டத்தில் 45 உறுப்பினர்களிடையே 13 உறுப்பினர்கள் மாத்திரமே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க மறுப்புத் தெரிவித்தாகவும் ஏனைய உறுப்பினர்கள் தற்போதைய ஜனாதிபதியை ஆதரிப்பதையே தமது விருப்பமாக தெரிவித்ததையடுத்து தமது கட்சி மகிந்தவை ஆதரிக்க தீர்மானித்தாக குறிப்பிட்டார்.
குறித்த 13 உறுப்பினர்கள் கட்சியின் ஒழுக்கத்தை மீறியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை வெல்ல வைப்பதற்கான போராட்டத்தை லங்கா சமசமஜக் கட்சி முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை லங்கா சமசமஜக் கட்சியியைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி ஐம்பதி விக்கிரமண ரட்ண பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளதாக நேற்று கொழும்பில் நடந்த இன்னொரு செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.