Breaking News

ஜோதிடர்களைத் தேடும் அரசியல் வாதிகள்

பெரும் எண்ணிக்கையிலான அரசியல்வாதிகள் ஜோதிடர்களை நோக்கிப் படையெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் முடிவு தங்களது சொந்த எதிர்காலம் ஆகியன தொடர்பில் அறிந்து கொள்ள அரசியல்வாதிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.


நாட்டின் முன்னணி ஜோதிடர்களிடம் அரசியல்வாதிகள் தங்களது ஜாதகக் குறிப்புக்களை காட்டி தகவல்களை அறிந்து கொள்ள முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.எதிர்காலத்தில் தமக்கு ஏற்படப் போகும் நிலைமை குறித்து அறிந்து கொள்ள அதிகளவான அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சில அரசியல்வாதிகள் தங்களது தோசங்களை நீக்கிக்கொள்ள பூஜை வழிபாடுகளையும் மேற்கொண்டுள்ளனர்.இதேவேளை, ஜோதிடர்களின் கருத்து எதுவாக இருந்தாலும் குறித்த வேட்பாளருக்கு ஆதரவளிக்கப் போவதாக சில அரசியல்வாதிகள் தீர்மானித்துள்ளனர்.

தேர்தல் நடத்தப்பட வேண்டிய தினத்தை கூட ஜோதிடர்களே நிர்ணயிக்கின்றார்கள் என சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.