Breaking News

ஈழப்பிரச்சினைக்கு வாக்கெடுப்பு வைகோ வலியுறுத்து


ஐரோப்பிய நாடுகளுக்கான இந்தியத் தூதர் ஜோஹா கிரவின்கோ தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நேற்று செவ்வாய்க் கிழமை காலை சந்தித்து கலந்துரையாடினார். 


இந்தச் சந்திப்பில், வர்த்தக, கலாசார, அரசியல் உறவுகள், மற்றும் ஈழத்தமிழர்க்ள எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தான் தூதர்களுக்கு எடுத்து விளக்கினார் என்று வைகோ குறிப்பிட்டுள்ளார். 

ஈழத்தமிழர் பிரச்சினையில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு ஐரோப்பிய நாடுகளின் உதவியும், பங்களிப்பும் மிக அவசியம் என்பதையும் தான் வலியுறுத்தினார் எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.