Breaking News

சமையல் எரிவாயு இன்று நள்ளிரவு முதல் விலை குறைப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலைகளை 250 ரூபாவினால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


12.5 கிலோ கிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலையே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் 2 ஆயிரத்து 146 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆயிரத்து 896 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை மாற்றம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை எரிபொருளுக்கான விலைகளும் இன்று நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.