கட்சிகள் தேர்தல் சட்டங்களை மதிப்பதில்லை-கெஹலிய
இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே தேர்தல் சட்டங்களை மதிப்பதில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தல் சட்டங்களை 100 வீதம் மதிப்பதில்லை.ஜனாதிபதியின் பதாதைகள், சுவரொட்டிகளுக்காக அரசாங்கப் பணம் செலவிடப்படவில்லை.தேர்தலுக்காக அரச பணம் செலவிடப்படுகின்றது. எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதாகைகள், சுவரொட்டிகள், பெனர்களை காட்சிப்படுத்த பணம் செலவிடப்பட்டிருக்கும் என நினைக்கவில்லை.வரி செலுத்தாமல் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் அதற்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.