Breaking News

சர்ச்சைக்கு மத்தியில் தி இன்டர்வியூ திரைப்படம் வெளியீடு(திரைப்படம் இணைப்பு)

சோனி நிறுவனம் தயாரித்த தி இன்டர்வியூ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நீண்ட சர்ச்சைக்கு பிறகு வெளியாகி உள்ளது.


 அமெரிக்காவின் நியூயார்க்கில் ஏராளமான ரசிகர்கள் படத்தை காண ஆர்வத்துடன் குவிந்த வண்ணம் உள்ளனர்.  பிரபல ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான சோனி தி இன்டர்வியூ என்ற திரைப்படத்தைத் தயாரித்தது. அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ வின் இரண்டு அலுவலர்கள் பத்திரிக்கையாளர்கள் வேடத்தில் வடகொரியா சென்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னைக் கொலை செய்வது போன்ற நகைச்சுவைப் படமாக அது தயாரிக்கப்பட்டது.  

இந்நிலையில், சோனி நிறுவனத்தின் இணையதளம் மற்றும் கணினிகள் அடையாளம் தெரியாத நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. படம் வெளியானால் அதிபர் பெயருக்கு இழுக்கு ஏற்படும் என்ற பயத்தினார் வடகொரிய அரசு அலுவலர்கள் தான் சோனி நிறுவனத்தின் இணையதளத்தை ஹேக் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.


இதனால் இந்த படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது.  இந்நிலையில், சோனி நிறுவனத்தின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதில் வடகொரிய அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அந்நாடு அறிவித்தது. இதனிடையே தி இன்டர்வியூ திரைப்படம் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள திரையரங்குகளில் ஏராளமானோர் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர். தி இன்டர்வியூ திரைப்படம், பல சர்ச்சைகளுக்கு பிறகு வெளியாகி உள்ளதை அதிபர் ஒபாமா மற்றும் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்