மாகாண சபை உறுப்பினருக்கு மரண தண்டனை
சப்ரகமுவ மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஹசித்த முகந்திரமுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2001 ஆம் ஆண்டு கலவான பொலிஸ் பிரிவில் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையிலேயே இன்று ஹசித்த முகந்திரத்திற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.