கூட்டமைப்பின் ஆதரவை குறித்து இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை-ஜனாதிபதி
ஜனாதிபதித் தேர்தலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு பெறுவதைப் பற்றி தமது கட்சி இன்னும் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்களை இன்று வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி, தற்போதைய அரசியல் நிலைவரங்கள் குறித்தும் கருத்து வெளியிட்டார். "
அரச தரப்பு உறுப்பினர்கள் வெளியேறியதால் பெரிய வெற்றிடம் எதுவும்ஏற்படவில்லை. அரசு உறுதியாகவே உள்ளது. வெளியேறிய எவரையும் தேர்தலுக்குப் பின்னர் நான் பழிவாங்கப் போவதுமில்லை. தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவது பற்றி எமது கட்சிக்குள் இதுவரை எந்த பேச்சுக்களும் நடத்தப்படவில்லை. எனினும் அவர்கள் மாற்றுத் தரப்பினருடன் இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றனர் என்று எங்களால் அறிய முடிகிறது.என்று தெரிவித்தார்.