ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் ஆவணம் சமர்ப்பிப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் உள்ளிட்ட நால்வர் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பில் இன்று 2,15,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் கர்நாடகா உயர்நீதிமன்ற பதிவாளரிடம் கையளிக்கப்பட்டதாக தொிவிக்கப்படுகின்றது.18 வருடங்களாக நடந்துவந்த சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட தமிழகத்தின் முன்னாள் முதல்வருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபா அபராதமும் விதித்து கடந்த செப்டெம்பர் 27 ஆம் திகதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் ஜெயலிலிதா உள்ளிட்ட நால்வருக்கும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை இடைக்கால பிணை வழங்குமாறு ஒக்டோபர் 17 ஆம் திகதி இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் ஆறு வாரத்திற்குள் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் சார்பிலும் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.