Breaking News

மகிந்த,அவரது குடும்பம் மிகவும் ஊழலானது -அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ்

சிறிலங்காவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது
குடும்பத்தினரின் ஊழல் புரிந்துள்ளமையை விக்கிலீக்சிடமிருந்து தகவல் கசிந்துள்ளதாக கொழும்பு ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தினால் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணம் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளில் 85வீதமானவற்றில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் குடும்பத்தினர் ஈடுபடுவதுடன் மகிந்த ராஜபக்சே தனது தனிப்பட்ட  முறையில் 80வீதமான ஊழல் மோசடிகளில் தொடர்பிருப்பதாகவும் மக்கள் தெரிவித்திருப்பதாக விக்கிலீக்ஸ் தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது.

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ விற்காக மக்கள் கருத்துக் கணிப்புகளை மேற்கொண்டு வரும் சுனிமல் பெர்ணான்டோ, முன்னாள் அமெரிக்க தூதுவர் பெற்றீசியா புட்டினிஸிடம் இந்த தகவலை கூறியுள்ளார்.