Breaking News

ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

வவுனியா  ஆண்டியா புளியங்குளத்தில் இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஆர்ப்பாட்டம் இன்று  மதியம் கைவிடப்பட்டுள்ளது.
செட்டிகுளம் பிரதேச செயலாளாரினால் ஆண்டியா புளியங்குளம் மக்களுக்காக விளையாட்டு மைதானம் ஆரம்ப சுகாதார மையம். ஆரம்ப பாடசாலை என்பவற்றுக்காக ஒதுக்கப்பட்ட காணியை இராணுவத்தினர் தமது காணி எனவும் அதற்குள் எவரும் உட்பிரவேசிக்க வேண்டாம் எனவும் தொவிக்கப்பட்டதை அடுத்து நேற்று மாலையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் இன்று காலையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிரதேச செயலாளர் காணி தொடர்பான ஆவணங்களை இராணுவத்தினருக்கு காட்டியதுடன் கலந்துரையாடியிருந்தார். இதனையடுத்து எதிர்வரும் 21 ஆம் திகதிக்குள் இது தொடர்பான தீர்வை பெற்றுத்தருவதாக பிரதேச செயலாளர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அடுத்து ஆர்ப்பாட்டம் இன்று மதியம் கைவிடப்பட்டது.