Breaking News

நாளை வேட்புமனுக்கள் தாக்கல்

ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று நடைபெறப்போகும் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நண்பகலுடன் முடிவடைந்தன.


இதன்படி தமது கட்டுப்பணங்களை 17 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் 2 சுயேட்சை குழு வேட்பாளர்களும் செலுத்தியுள்ளனர்.இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் நாளை நடைபெறவுள்ளன. முற்பகல் 9 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை இரண்டு மணித்தியாலங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.இதற்காக கொழும்பிலும் தேர்தல் திணைக்கள பிரதேசத்திலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன