மகிந்தவின் ஆடைக்குள் புலிக்குட்டிகள்- பொன்சேகா
மகிந்த ராஜபக்சவின் ஆடைக்குள் சகல புலிக் குட்டிகளும் இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால ஆட்சிக்கு வந்தால், விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பொறுவார்கள் என நாட்டின் ஆட்சியாளர் கூறுகிறார்.
ஆனால் தாம் உயிருடன் இருக்கும் வரை மீண்டும் புலிகள் மீளெழுச்சி பெற அனுமதிக்க மாட்டோம்.இந்த ஆட்சியாளரே தனது ஆடைக்குள் புலிக்குட்டிகளை வைத்துள்ளார். கருணா, பிள்ளையான், கே.பி போன்ற புலிகளின் தலைவர்களை தன்னுடன் வைத்துள்ளார்.
போரில் 5000 படையினர் இறந்தனர். அப்படியான நிலையில், புலிகளின் தலைவர்களை தன்னுடன் வைத்திருக்கும் இந்த ஆட்சியாளர் எப்படி தேசப்பற்றுள்ளவாராக இருப்பார் எனவும் பொன்சேகா கூறியுள்ளார்.