Breaking News

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர் கைது

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பிரிவைச்
சேர்ந்தவர் என கூறப்படும் நபர் ஒருவரை திருகோணமலை சாம்பல்தீவு பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

32 வயதுடைய கந்தராஜா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அனுப்பி விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.